Home celebrities இந்தியன் 2 படத்தை ஓரம் கட்டிய ஷங்கர்; ராம் சரணுடன் கூட்டணி

இந்தியன் 2 படத்தை ஓரம் கட்டிய ஷங்கர்; ராம் சரணுடன் கூட்டணி

472
0
#SVC50 #RC15 ஷங்கர்-ராம்சரண் இந்தியன் 2 indian 2

This post is also available in: English (English)

ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் 1996-ஆம் ஆண்டு திரைக்கு வந்த படம் இந்தியன். 21 வருடங்களுக்குப் பிறகு (இந்தியன் 2) இரண்டாம் பாகம்  கடந்த 2017-ஆம் ஆண்டு துவங்கப்பட்டது.

பல்வேறு காரணங்களால் படப்பிடிப்பு தள்ளிக்கொண்டே சென்றது. கடந்த ஆண்டு படப்பிடிப்பு தளத்தில் கிரேன் விழுந்து உயிரிழப்பு ஏற்பட்டது.

இதனால் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. போலீசார் விசாரணை நடத்தினர். அதன்பிறகு கொரோனா தொற்று காரணமாக படப்பிடிப்பு நடைபெறவில்லை.

லாக்டவுன் முடிந்து படப்பிடிப்பிற்கு அரசு அனுமதி கொடுத்தாலும், பிக்பாஸ் மற்றும் அரசியல் வேலைகள் என கமல்ஹாசன் பிசியாக உள்ளார்.

பொதுவாக ஷங்கர் ஒரு படத்தை எடுத்து முடிக்க 2 முதல் 3 வருடங்கள் எடுத்துக்கொள்வார். ஆனால், இந்தியன்-2 படம் ஷூட்டிங் துவங்கவே வருடக்கணக்கில் செல்வதால் ஷங்கர் Indian-2 படத்தை ஓரம் கட்டிவிட்டார்.

#SVC50 #RC15 ஷங்கர்-ராம்சரண்

தேர்தல் முடிந்து கமல்ஹாசன் மீண்டும் இந்தியன்-2 படப்பிடிப்பிற்கு திரும்புவதற்குள் ராம் சரணை வைத்து ஒரு படம் இயக்கப்போவதாக அறிவித்துள்ளார்.

ராம் சரண் படம் குறுகிய காலத்திற்குள் எடுத்து முடிக்கப்படும் எனத் தெரிவித்துள்ளார். டில்லி ராஜு இப்படத்தை தயாரிக்கிறார். தயாரிப்பாளர் தயாரிக்கும் 50-வது படம் மற்றும் ராம் சரணுக்கு 15-வது படம்.

ராஜமவுலி இயக்கிய ‘RRR’ படத்தில் நடித்து முடித்த கையேடு மீண்டும் ஒரு மெகா கூட்டணியில் இணைவதால் ஷங்கர்-ராம்சரண் படம் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

Previous articleMaster 30 days celebration; Lokesh Kanagaraj visits rakki cinemas
Next articleShankar postpones Indian 2 to direct new film with Ram Charan

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here