Home celebrities இவரே இப்பத்தான் ஊசி போட்டுருக்காரா? முதல் ஊசி போட்டுக் கொண்ட கார்த்தி!

இவரே இப்பத்தான் ஊசி போட்டுருக்காரா? முதல் ஊசி போட்டுக் கொண்ட கார்த்தி!

568
0

நடிகர் கார்த்தி நேற்று தனது முதல் தடுப்பூசியை போட்டுக் கொண்டுள்ளார்.

பருத்திவீரன் படம் மூலமாக ஹீரோவாக அவதாரம் எடுத்தவர் நடிகர் கார்த்தி. இப்படம் கொடுத்த வரவேற்பைத் தொடர்ந்து வரிசையாக ஏராளமான படங்களில் நடித்துள்ளார். அண்மையில், கார்த்தி நடித்த சுல்தான் படம் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலானது. இந்தப் படத்திற்கு கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து சர்தார் மற்றும் பொன்னியின் செல்வன் ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

நாட்டையே உலுக்கி வரும் கொரோனா காரணமாக சினிமா பிரபலங்கள் பலரும் கொரோனா தடுப்பூசி போட்டு வருகின்றனர். ரஜினிகாந்த், அருண் விஜய், சிம்ரன், சூரி, வேல்முருகன், பவித்ரா லட்சுமி, ரைசா வில்சன், கனி, கணேஷ் வெங்கட்ராமன், சாந்தனு, ரித்விகா, நிதி அகர்வால், சோனியா அகர்வால், அசோக் செல்வன் என்று பிரபலங்கள் பலரும் கொரோனா தடுப்பூசி போட்டுள்ளனர்.

அந்த வகையில், ரசிகர்களுக்கு முன்னுதாரணமாக விளங்கக் கூடிய நடிகர் கார்த்தியே இப்போதுதான் தனது முதல் தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளார். ஆனால், கொரோனா தடுப்புப் பணிகளுக்கு என்று சிவக்குமார், சூர்யா மற்றும் கார்த்தி ஆகியோர் இணைந்து ரூ.1 கோடி நிதியுதவி அளித்துள்ளனர். இன்னும் மாஸ் ஹீரோக்களாக பார்க்கப்படும் அஜித், விஜய், சூர்யா, விக்ரம் ஆகியோர் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டார்களா? இல்லையா? என்பது குறித்து எந்த தகவலும் இல்லை. இல்லை என்றால், எப்போது கொரோனா தடுப்பூசி செலுத்துவார்கள் என்பது ரசிகர்களின் கேள்வியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Previous articleChiyaan Vikram: என்ன ஒரு டெடிகேஷன்: இவரு வேற லெவல்: வைரலாகும் கோப்ரா பட புகைப்படங்கள்!
Next articleSimbu:ஹாட்ஸ்டாரில் வெளியான சிம்புவின் ஈஸ்வரன்: கொண்டாடும் ரசிகர்கள்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here