Home celebrities Khushbhu: அண்ணாத்த படத்தை முடிக்க பிளான் போட்ட குஷ்பு!

Khushbhu: அண்ணாத்த படத்தை முடிக்க பிளான் போட்ட குஷ்பு!

940
0

அண்ணாத்த படத்தின் தனது பகுதிகளை முடித்துக் கொடுக்க நடிகை குஷ்பு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இயக்குநர் சிவா இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் படம் அண்ணாத்த. இந்தப் படத்தில் ரஜினியுடன் இணைந்து மீனா, குஷ்பு, நயன்தாரா, சூரி, சதீஷ், கீர்த்தி சுரேஷ், ஜகபதி பாபு, வேல ராமமூர்த்தி, தவசி, ஜார்ஜ் மரியன், பிரகாஷ் ராஜ், ஜாக்கி ஷெராஃப், கபாலி விஸ்வநாத் ஆகியோர் பலர் நடித்துள்ளனர். இமான் இசையமைத்துள்ள இந்தப் படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

படக்குழுவினருக்கு ஏற்பட்ட கொரோனா பாதிப்பு மற்றும் ரஜினியின் உடல்நிலை காரணமாக அண்ணாத்த படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டது. அதன் பின் நீண்ட இடைவெளிக்குப் பிறகு தொடங்கப்பட்ட அண்ணாத்த படப்பிடிப்பு படப்பிடிப்பு கொரோனா விதிமுறைகளுடன் விறுவிறுப்பாக நடந்தது. இதில், கலந்து கொண்ட ரஜினிகாந்த் இரவு பகலாக பணியாற்றி தனது பகுதிகளை முடித்துக் கொடுத்துவிட்டு சென்னை திரும்பினார்.

தற்போது போஸ்ட் புரோடக்‌ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வந்தாலும் கொரோனா 2ஆவது அலையின் காரணமாக அனைத்து படங்களின் படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. கொரோனா தாக்கம் குறைந்து படப்பிடிப்புக்கு அரசு அனுமதி அளித்த பின் மீண்டும் அண்ணாத்த படப்பிடிப்பு தொடங்கப்படும் என்று கூறப்படுகிறது.

தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலின் போது நடிகை குஷ்பு பிஸியாக இருந்துள்ளார். ஆதலால், அவரால், தனது பகுதிகளை முடிக்கமுடியவில்லை. இந்த நிலையில், லாக்டவுன் முடிந்து மீண்டும் தொடங்கப்படும் அண்ணாத்த பட த்தின் படப்பிடிப்பில் குஷ்பு கலந்து கொள்ள இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அதோடு, தனது பகுதிகளை விரைந்து முடிக்கவும் அவர் திட்டமிட்டுள்ளாராம்.

இதே போன்று, எஞ்சியுள்ள பகுதிகள் விரைவில் தொடங்கப்பட்டு அனைத்து காட்சிகளும் முடிக்கப்பட இருக்கிறது. ஏற்கனவே அறிவித்தபடி, வரும் நவம்பர் 4 ஆம் தேதி தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அண்ணாத்த படம் திரைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Previous articleSimbu:ஹாட்ஸ்டாரில் வெளியான சிம்புவின் ஈஸ்வரன்: கொண்டாடும் ரசிகர்கள்!
Next articleThala Ajith: இன்னும் 3 நாள் ஷூட் தான் இருக்கு: வலிமை அப்டேட்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here