தமிழக முதல்வராக மு.க. ஸ்டாலின் பொறுப்பேற்ற பிறகு அவரை சந்தித்து பேசிய நடிகர் விஷால் சில கோரிக்கைகளை வைத்துள்ளார்.
தமிழகத்தில் நடந்து முடிந்த 16ஆவது சட்டமன்ற தேர்தலில் திமுக 125 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெருமான்மையுடன் ஆட்சியை கைப்பற்றியது. இதையடுத்து, முதல் முறையாக தமிழக முதல்வராக மு.க.ஸ்டாலின் இன்று பதவியேற்றார். அவருடன் இணைந்து 33 அமைச்சர்களும் பதிவி ஏற்றுக் கொண்டனர்.
முதல் முறையாக தமிழக முதல்வரான மு.க.ஸ்டாலினுக்கு அரசியல், சினிமா பிரபலங்கள் பலரும் வாழ்த்து தெரிவித்த வண்ணம் இருக்கின்றனர். அந்த வகையில், நடிகர் விஷால் டுவிட்டரில் வாழ்த்து தெரிவித்ததோடு, நேரில் சென்றும் வாழ்த்து தெரிவித்துள்ளார். அதன் பிறகு அவர் கூறியிருப்பதாவது: முதல்வரை சந்தித்து வாழ்த்து கூறினேன். அதன் பிறகு நடிகர் சங்கத்தில் இருக்கும் இன்றைய சூழ்நிலையையும், கலைஞர்களின் பென்ஷன், மருந்து கூட வாங்க முடியாமல் கஷ்டப்படும் நிலை பற்றியும் எடுத்து கூறினேன்.
அதற்கு முதலில், கொரோனாவில் இருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ளும் அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அது கட்டுக்குள் வந்த பிறகு அனைத்து ஆவணங்களையும் கண்டிப்பாக செய்து தருகிறேன் என்று வாக்குறுதி அளித்தார் என்று கூறியுள்ளார்.