Home celebrities Simbu:ஹாட்ஸ்டாரில் வெளியான சிம்புவின் ஈஸ்வரன்: கொண்டாடும் ரசிகர்கள்!

Simbu:ஹாட்ஸ்டாரில் வெளியான சிம்புவின் ஈஸ்வரன்: கொண்டாடும் ரசிகர்கள்!

721
0

சிம்பு நடிப்பில் வெளியான ஈஸ்வரன் படம் ஈஸ்வரன் படம் 5 மாதங்களுக்குப் பிறகு ஹாட்ஸ்டாரில் வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் சிம்பு. வந்தா ராஜாவாதான் வருவேன், 90 எம்.எல் ஆகிய படங்களைத் தொடர்ந்து சிம்பு நடிப்பில் வெளியான படம் ஈஸ்வரன். இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில் சிம்பு, நிதி அகர்வால், பாரதிராஜா, காளி வெங்கட், பால சரவணன், நிவேதா ஸ்வேதா, மனோஜ் பாரதிராஜா, முனீஷ்காந்த், ஹரிஷ் உத்தமன், ஸ்ரீ துர்கா, சரவண சக்தி என்று ஏராளமான பிரபலங்கள் நடிப்பில் ஈஸ்வரன் படம் உருவாக்கப்பட்டிருந்த து. குடும்பக் கதையை மையப்படுத்திய ஈஸ்வரன் படம் கடந்த 14 ஆம் தேதி பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரைக்கு வந்த து. அப்போது, திரையரங்குகளில் வெறும் 50 சதவிகித இருக்கைகளுக்கு மட்டுமே அனுமதி. ஈஸ்வரன் பட த்துடன் இணைந்து தளபதி விஜய் நடித்திருந்த மாஸ்டர் படம் ஒரு நாளுக்கு முன்னதாக 13 ஆம் தேதியே வெளியிடப்பட்ட து.

என்னதான் மாஸ்டர் மாஸான படமாக இருந்தாலும், எதற்கும் அஞ்சாமல் ஈஸ்வரன் படம் திரைக்கு வந்தது. விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் ஈஸ்வரன் படம் படம் நல்ல வரவேற்பு பெற்றது. இந்த நிலையில், ஈஸ்வரன் படம் வெளியாகி 6 மாதங்கள் ஆன நிலையில், ஹாட்ஸ்டாரில் வெளியிடப்பட்டுள்ளது. ஏற்கனவே வரும் 12 ஆம் தேதி ஹாட்ஸ்டார் விஐபியில் ஈஸ்வரன் படம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி இன்று ஹாட்ஸ்டார் விஐபியில் ஈஸ்வரன் வெளியிடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

சிம்பு நடிப்பில் மாநாடு படம் உருவாக்கப்பட்டுள்ளது. விரைவில் மாநாடு படம் வெளியாக இருக்கிறது. இதே போன்று பத்து தல, மஹா ஆகிய படங்களிலும் நடித்துள்ளார்.

Previous articleஇவரே இப்பத்தான் ஊசி போட்டுருக்காரா? முதல் ஊசி போட்டுக் கொண்ட கார்த்தி!
Next articleKhushbhu: அண்ணாத்த படத்தை முடிக்க பிளான் போட்ட குஷ்பு!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here