Home celebrities Chiyaan60: சியான்60 ஷூட்டிங் 50% ஓவர்: கார்த்திக் சுப்புராஜ்!

Chiyaan60: சியான்60 ஷூட்டிங் 50% ஓவர்: கார்த்திக் சுப்புராஜ்!

487
0

விக்ரம் நடிப்பில் உருவாகி வரும் சியான்60 படத்தின் படப்பிடிப்பு 50 சதவிகிதம் வரையில் முடிக்கப்பட்டுள்ளதாக இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் தெரிவித்துள்ளார்.

கோப்ரா, துருவ நட்சத்திரம், பொன்னியின் செல்வன் ஆகிய படங்களில் சியான் விக்ரம், நடித்து வருகிறார். விரைவில், இந்தப் படங்கள் திரைக்கு வர இருக்கின்றன. இந்தப் படங்களைத் தொடர்ந்து இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சியான்60 படத்தில் நடிக்கிறார். இந்தப் படத்தில் விக்ரமுடன் இணைந்து துருவ் விக்ரமும் நடிக்கிறார். இவருக்கு வில்லான சியான் நடிக்கிறார் என்று கூறப்படுகிறது. லலித்குமார் தனது 7 ஸ்கிரீன் ஸ்டூடியோ நிறுவனத்தின் மூலமாக இந்தப் படத்தை தயாரிக்கிறார். இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இந்தப் படத்திற்கு இசையமைக்கிறார்.

ஆக்‌ஷன் கதையை மையப்படுத்தி இந்தப் படம் உருவாக்கப்பட்டு வருகிறது. இந்தப் பட த்தில் சியான் விக்ரமுக்கு ஜோடியாக நடிகர் சிம்ரன் நடிக்க இருக்கிறார். மேலும், பாபி சிம்ஹா, வாணி போஜன், சனந்த் ஆகியோர் பலர் நடிக்கின்றனர். விறுவிறுப்பாக நடந்து வந்த படப்பிடிப்பு கொரோனா லாக்டவுன் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், இந்தப் படம் குறித்து இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் முக்கியமான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதன்படி, சியான்60 பட த்தின் படப்பிடிப்பு 50 சதவிகிதம் முடிக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள காட்சிகள் கொரோனா லாக்டவுன் முடிவுக்கு வந்த பிறகு தொடங்கப்படும் என்று அவர் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாக்கப்பட்டுள்ள ஜகமே தந்திரம் படம் வரும் 18 ஆம் தேதி நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாக இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Previous articleJagame Thandhiram: 3 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் இயக்குவேன்: தனுஷ்!
Next articleDhruv Vikram: துருவ் விக்ரமுக்கு ஜோடியான வாணி போஜன்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here